மழை நீரில் நனையலாமா.? மழை நீரை குடிக்கலாமா.?  - Seithipunal
Seithipunal


சுத்தமான மழை நீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது. காய்ச்சல் வருகிறது.

இது ஏன் வருகிறது? அதாவது, மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது.

உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சளி பிடிக்காமல், காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள்.

எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள்.

எனவே யாருக்கு நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த முடியும்.

மழை நீரை குடிக்கலாமா?

மழை நீரை குடிப்பதன் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த முடியும்.

மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருட்களும் வானத்தில் இருக்கும்.

முதல் 5 நிமிடத்தில் மழை நீர் அந்த தூசுகள், குப்பைகளை எடுத்துக்கொண்டு பூமியை நோக்கி வரும். எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழை நீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழை நீரை நேரடியாக பாத்திரத்தின் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தியோ அந்த நீரை பிடிக்க வேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழை நீரையும் பிடிக்கலாம்.

 இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான, தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். 

குழந்தைகள் மழையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்க வேண்டாம். மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான, மனதிற்கு பிடித்தமான நிகழ்ச்சி.

மேலும் ஆரோக்கியமானதும் கூட... எனவே இனிமேல் மழை வரும்போது அதில் நனையலாம் நல்லது... மழை நீரை குடிக்கலாம் நல்லது... மழை நீரில் உள்ள பிராணன் ஒரு அற்புதமான மருந்து.

எனவே இனி நம் வாழ்வில் மழை நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணமானது கிடையாது. நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rain water drink or not


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->