காலையில் இதை செய்தால் உங்கள் நாளே சிறப்பாகும்.! உடல், மன ஆரோக்கியத்திற்கு சூப்பர் டிப்ஸ்.!  - Seithipunal
Seithipunal


மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சில மணி நேரமாவது அன்றாடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். பலரும் காலையில் உடற்பயிற்சி செய்ய நேரமில்லாமல் மாலை வேலைகளில் செய்வது வழக்கம். 

உடற்பயிற்சி என்பது காலையில் செய்வதுதான் மிகவும் நல்லது. காலை நேரத்தில் சைக்கிள் ஓட்டுவது, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது உள்ளிட்டவை நமது மூலையில் உற்சாக ஹார்மோன்களை தூண்டி விடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

அத்துடன் இதன் மூலம் ஞாபக சக்தியும் மேம்படும் என்று கூறப்படுகிறது. காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் அன்றைய பொழுதும் படபடப்பு, கோபம், டென்ஷன் உள்ளிட்டவை குறைந்து கூலாக இருக்க முடியும். காலை நேரத்தில் நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் காலையில் உடற்பயிற்சி செய்வது அவசியம். இந்த காலகட்டத்தில் உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டது. எனவே, உடற்பயிற்சி மேற்கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகை செய்யும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

morning exercise daily routine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->