மறுவாழ்வு மையமா.? 5 ஸ்டார் ஹோட்டலா.? ஆச்சரிய தகவல்.! - Seithipunal
Seithipunal


இன்றைய காலகட்டங்களில் நம் நாட்டில் இளைஞர்களிடம் போதை மற்றும் மது பழக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு காலத்தில் காதல் தோல்வி குடும்ப பிரச்சினையால் விரக்தி என்ற காரணங்களால் குடித்துக் கொண்டிருந்த இளைய சமூகம்  இன்று காரணமே இல்லாமல் கொண்டாட்டங்களுக்காகவும்  குடித்து மதுவிற்கு அடிமையாகி வருகின்றனர். மேலும் கஞ்சா மற்றும் போதை மருந்துகளின் பழக்கங்களும் இளைஞர்களிடம் சர்வ சாதாரணமாக அதிகரித்துவிட்டன. இவர்களால் இந்த பழக்கத்திலிருந்து எளிதில் வெளிவர முடியாது. அதற்கு என சிறப்பு சிகிச்சைகளும் அவற்றை வழங்குவதற்கு என்று சிறப்பு மறுவாழ்வு மையங்களும் உள்ளன.

இந்தியாவில் பல்வேறு வசதிகளுடன் கூடிய ஆடம்பரமான மறுவாழ்வு மையங்கள் எவை மற்றும் அவற்றில் என்னென்ன வசதிகள் வழங்கப்படுகின்றன என்று பார்ப்போம். பொதுவாக இதுபோன்ற சிகிச்சைகளுக்கு தனிநபர் கவனம் மற்றும் அமைதியான சூழல் அவசியம் நம் நாட்டில் அமைந்திருக்கும் ஆடம்பரமான மறுவாழ்வு மையங்கள்  இந்த இரண்டையும் முறையே கொண்டிருக்கின்றன. இதனால் இந்த மையங்களில் தங்கி சிகிச்சை பெறுவதன் மூலம் எளிதில் அந்த பழக்கங்களில் இருந்து குணமடைய முடியும்.

வேதா புணர் வாழ்வு மற்றும் ஆரோக்கிய மையம்:

இது இந்தியாவில் இருக்கக்கூடிய மிகச் சிறந்த உறுப்பினர் வாழ்வு மையமாகும். இங்கு போதைக்கு அடிமையானவர்களையும் மதுவிற்கு அடிமையானவர்களை மீட்டு அவர்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதை சேவையாக செய்து வருகின்றனர். இந்த மையத்தில்  தனிநபர் சிகிச்சை மற்றும் கூட்டு சிகிச்சைகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. எந்தவித துன்புறுத்தலுமில்லாமல் தியானம் பயிற்சி நல்லொழுக்கம் ஆகியவற்றின் மூலம் மது மற்றும் போதைக்கு அடிமையானவர்களை அந்த பழக்கங்களில் இருந்து மீட்டுக் கொண்டு வருகின்றனர். இந்த மருத்துவமனையில் நல்ல உட்கட்டமைப்பு வசதி மெடிக்கல் சைக்காலஜிஸ்ட்  மனநல மருத்துவர்கள் அறிவாற்றல் மற்றும் நடத்தை வல்லுனர்கள் ஆகியோர்  உயர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆல்பா ஹீலிங் மற்றும்  வெல்னெஸ்  சென்டர் :

குஜராத் மாநிலத்தின் வதோதரா நகருக்கு அருகே அமைந்துள்ள இந்த மறுவாழ்வு மையம்  இந்தியாவில் இருக்கக்கூடிய மிகச் சிறந்த போதை மறுவாழ்வு மையங்களில் ஒன்றாகும் . ஆல்கஹால் போதை பொருள் மற்றும் வேறு ஏதேனும் அடிமைத்தனத்தில் இருப்பவர்களுக்கு  டி அடிக்சன் மருத்துவம் இங்கே மிகச் சிறப்பாக கையாளப்படுகிறது . இங்கு பல்வேறு சான்றிதழ்களை பெற்ற தரமான மருத்துவர்களின் கண்காணிப்பில்  போதை மற்றும் ஆல்கஹாலுக்கு அடிமையானவர்கள் மீட்கப்படுகிறார்கள் . பாரம்பரியமான சிகிச்சைகளின் மூலம்  நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைத்து  அவர்களை தங்கள் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வர செய்கிறார்கள்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

is they rehab centers or star hotels a view


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->