நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.. நெல்லிக்காய்..! தேன் நெல்லிக்கனியை வீட்டிலேயே செய்வது எப்படி?.. பயன்கள் என்னென்ன?..! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பெரும்பாலானோருக்கு உடலில் ரத்தம் குறைவு தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. இந்த பிரச்சனையை சரி செய்து, இரத்த விருத்தியை அதிகரிக்க தேன் நெல்லிக்கனியை நாம் சாப்பிடலாம். முதலில் தேன் நெல்லிக்கனி எப்படி செய்வது என்று காண்போம்.

நெல்லிக்கனியை சுத்தமாக கழுவி, இட்லி தட்டுகளில் சேகரித்து, தண்ணீருடன் இரண்டு கரண்டி பாலை சேர்த்து முதலில் நன்றாக சுட வைக்க வேண்டும். பால் கலந்த நீர் நன்கு சூடானதும், இட்லியை போல நெல்லிக்கனியை வேகவைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அரைகிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக மாற்றி, தேவையான அளவு இனிப்பு பதத்திற்கு ஏற்றாற்போல நீரில் கரைத்து வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும்.

தேன் வாங்கி சேர்க்க விரும்புவார்கள், வேகவைத்த நெல்லியை நேரடியாக தேனில் ஊறவைத்து கொள்ளலாம்.

இந்த கரைசலை காய்ச்சி இறக்கியதும், நெல்லிக்கனியை சேர்த்து வைத்துவிடலாம். இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வரலாம். இவ்வாறான தேன் நெல்லிக்கனியை தினமும் சாப்பிட்டு வருவதால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரும்பு சத்து போன்ற பல சத்துக்கள் கிடைக்கும். உடலின் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். சுறுசுறுப்பை கொடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare honey nellikkai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->