ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு, மூட்டுவலியை சரிசெய்வது எப்படி.?!  - Seithipunal
Seithipunal


ஆப்பிள் சாப்பிடுவதால் பல நன்மைகள் நமக்கு ஏற்படுகின்றன. அதுபோல் ஆப்பிளை பதப்படுத்தி அதிலிருந்து பெறப்பட்ட வினிகரும் பல சத்துக்களையும், நன்மைகளையும் நமக்கு தருகிறது.

ஆப்பிள் பழத்தில் உள்ள நன்மைகள் :

திசுநீர்த்தேக்கி என்ற வேதிப் பொருள்தான் உடலில் எதிர்ப்பு வினையை காண்பிக்கும். இதன் காரணமாகத் தான் உடலில் அலர்ஜி உண்டாகிறது. இதனை கட்டுப்படுத்தும் கொயர்செட்டின் என்ற பொருள் ஆப்பிளில் நிறைய உள்ளது. இதனால் உடலில் உண்டாகும் அதிகப்படியான அலர்ஜியை தடுக்கலாம்.

பச்சை ஆப்பிளை நுகர்வதால் ஒற்றை தலைவலி குணமாகும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு அவை முழங்கால் வலியையும் குணப்படுத்துகின்றனவாம். ஆகவே தலைவலி வரும்போது பச்சை ஆப்பிளை துண்டாக்கி நுகருங்கள்.

ஆப்பிள் லெதர் என்பது தோலினால் செய்யப்பட்ட மேலுறை அல்ல. இது ஒரு வகையான ஆப்பிளின் தோலில் செய்யப்படும் மொறுமொறுப்பான, சத்துக்கள் நிறைந்த, உடலுக்கு கேடுகளைத் தராத நொறுக்குத் தீனியாகும்.

பழங்கள் காயாக இருந்தால் அவற்றை எளிதில் பழுக்க வைக்க ஆப்பிளை பயன்படுத்தலாம். அதாவது காயான பழங்களோடு, பழுத்த ஆப்பிளையும் சேர்த்து ஒரு பேப்பரில் சுற்றி வைத்தால், ஒரே நாளில் பழுத்துவிடும்.

சிறிது ஆப்பிள் சைடர் வினிகரை நீரில் கலந்து தலை முடியை அலசினால் கூந்தலில் தங்கியிருக்கும் நச்சு வாய்ந்த ஷாம்புவின் ரசாயனங்கள் அகன்றுவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to cure leg pain using Apple in tamil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->