தயிர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. இரவில் தான் தயிரே சாப்டனுமாம்.! - Seithipunal
Seithipunal


தயிர் நாம் சாப்பிடும் உணவுகளிலேயே அதிக நன்மையை வழங்கக்கூடியது., நாம் சளி இருமல் வந்தால் தயிர் சாப்பிடுவதை நிறுத்தி விடுவோம். ஆனால், தயிர் ஊட்டச்சத்து அதிகம் கொண்டது.

இதிலுள்ள லாக்டிக் அமிலம், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் புரதம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது  இதனால் தொற்று உள்ளிட்டவையில் இருந்து நம்மை காக்கிறது.

தயிரில் ஜிங்க், மெக்னீசியம், விட்டமின் டி, செலனியம் உள்ளிட்டவை இருக்கிறது. இதில், நல்ல பாக்டீரியாக்கள் கொண்டிருப்பதால் செரிமானத்தை தூண்டுகிறது. 

அஜீரணம், குடல் எரிச்சல் போன்ற வயிற்று பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது.

தயிரில் ஜீரோ கலோரிகள் இருக்கிறது. ஆனால், இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இதன் மூலம் எடை குறைய உதவும். பலரும் குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவது தவறு என்று கூறுகிறார்கள்.

ஆனால் இது உண்மை அல்ல கட்டாயம் குளிர் காலத்திலும் தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும்.  தயிரை குளிர்காலத்தில் பிற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவது நல்லது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இரவு நேரங்களில் தயிரை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இரவு நேரத்தில் தயிர் எடுத்துக் கொள்வது மூளையில் கிரிப்டோபான் என்ற ஸ்பெஷல் அமினோ அமிலத்தை சுரக்க உதவுகிறது. 

நரம்புகளை தளர்த்தி மனதை அமைதிப்படுத்துகிறது. இரவில் தயிர் சாப்பிடுவதால் மூளையின் நியூரான்கள் மறுசீரமைக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

தாய்ப்பால் கொடுப்பவர்கள் தயிர் சாப்பிடுவதால் கேடு என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள் தயிரை எடுத்துக் கொள்வதால் நோய் தொற்றோ, சளியோ ஏற்படாது. நல்ல பாக்டீரியாக்கள் நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும். 

தயிர் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில், புரதங்கள் அதிகமாக இருப்பதால் இதை எடுத்துக் கொள்ளலாம். தயிர் சாப்பிட்டால் உடல் எடை ஏறும் என்று கூறுகிறார்கள். ஆனால் இது உண்மை இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Curd Eat In night


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->