கோவையில் பயிற்சி மருத்துவர்களிடம் பணம் வசூலிப்பதாக புகார் - நடவடிக்கை எடுக்க டீன் உறுதி - Seithipunal
Seithipunal


மாணவர்களுக்கு, பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்க, கோவை அரசு மருத்துவ கல்லூரியில் சிலர் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, விசாரணை செய்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அக்கல்லூரி டீன் நிர்மலா கூறியுள்ளார்.

இதைப்பற்றி கோவை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்தாவது; அனைத்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்களுடைய படிப்பை முடித்தபின் காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு, எலும்பு முறிவு சிகிச்சை, மருந்தியல், சோசியல் மற்றும் பிரிவென்டிவ் மெடிசன் என்பன உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் சுமார் ஒரு ஆண்டுக்கு பணியாற்ற வேண்டும்.

அந்த பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ்களை மாணவர் முறைப்படி பெற, ஒவ்வொரு துறை பேராசிரியர்களும் கையெழுத்து இட வேண்டும்.

இந்நிலையில், மாணவர்கள் இவ்வாறு கையெழுத்து வாங்க வரும் போது சிலர், அவர்களிடம் பணம் கேட்கின்றனர். இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் விரைவில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதைப்பற்றி கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறும்போது, மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் நான் பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு பின்புதான் டீனாக பதவி உயர்வு பெற்றேன்.

இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் எந்த காரணத்திற்காகவும்  பயிற்சி மருத்துவ மாணவர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது. இதனால், பாதிப்படைந்த மாணவர்கள் யாராக இருந்தாலும் என்னிடம் நேரில் வந்து புகார் கொடுத்திருக்கலாம்.

ஆனால், இதுவரை இப்பிரச்சினை தொடர்பாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சரியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Complaints about collecting money from practicing doctors in Coimbatore Dean assured to take action


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->