'உணவே மருந்து' னு சும்மாவா சொன்னாங்க..! இதில் இத்தனை சத்துக்கள் இருக்கிறதா.?! - Seithipunal
Seithipunal


பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள் :

இதனுடைய சுபாவம் குளிர்ச்சி ஆகும். இந்தக் காய் பசியைத் தூண்டி நீரைப் பெருக்கும். கபத்தை அகற்றும். காற்றை நீக்கும்.

இதைப் பருப்புடன் சேர்த்து கூட்டு செய்தோ, கறி செய்தோ சாப்பிடலாம். சுவையாக இருக்கும். சற்று பிஞ்ஞாக சமைப்பதே நலம். ஆனால் ஒரு கண்டிஷன். இந்தக் காயை மருந்து உண்ணும் காலங்களில் கண்டிப்பாக சாப்பிட வேண்டாம்.

பயத்தங்காய், செய்திபுனல்

பலாக்காயின் மருத்துவப் பயன்கள் :

பலாக்காய் குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது. சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கவல்லது.

பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.

பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும். 

குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர்களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக்கூடாது.

பலாக்காய், செய்திபுனல்

கொழுமிச்சையின் மருத்துவப் பயன்கள் :

கொழுமிச்சையில் வைட்டமின் சி இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் அதிகரிக்கிறது.

கொழுமிச்சம் பழத்தை சாப்பிடுவதால் இருமல் மற்றும் சளி குறையும்.

கொழுமிச்சம் பழச்சாறு உடலின் களைப்பை போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும். அதிகதாகம், நாவறட்சி போன்றவை நீங்கும்.

கொழுமிச்சம், செய்திபுனல்

சவ்சவின் மருத்துவப் பயன்கள் :

சவ்சவ்வில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன.

சவ்சவ்வில் உள்ள கால்சியம் சத்தானது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது.

மேலும் சவ்சவ்வில் உள்ள வைட்டமின் சி, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

சவ்சவ், செய்திபுனல்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of this four vegetables


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->