தமிழ்நாட்டுக்கு அடுத்த தலைநகர் ரெடி.! வரலாற்றில் இடம்பிடிக்கும் எடப்பாடி.!  - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக ஒரு அதிரடி அறிவிப்பை அறிவிக்கப் போகிறார் என்று சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தின் தலைநகரமாக திருச்சியை அறிவிக்க இருக்கிறாராம். சென்னை தொடர்ந்து துணை தலைநகரமாக இருக்குமாம். தலைமைச் செயலகம் மற்றும் புதுப்புது அலுவலகங்கள் திருச்சியில் தொடங்கப்படும் என்று அந்த தகவல் தெரிவிக்கின்றது. 

இதன் காரணமாக தென் பகுதி மக்கள் தலைநகரை அடைவது எளிமையாக இருக்கும் என்பதே காரணமாக கூறப்படுகிறது. இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி வரலாற்றில் இடம் பிடிக்க முயற்சிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. எம்ஜிஆர் முதல்வராக இருக்கும் பொழுது திருச்சியைத் தலைநகராக மாற்று முடிவெடுத்து திட்டத்தை அறிவித்தார்.

ஆனால், இந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. திமுகவினர் இதனை மிகவும் எதிர்த்தனர். அப்போது மத்திய அரசு ஆதரவு கிடைக்காததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இதுகுறித்து எந்த விதமான முயற்சியும் எடுக்க வில்லை. இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றது. திருச்சி தலைநகரமாக அமையுமா என்பது குறித்து அதிமுக தரப்பிலிருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEW HEAD FOR TAMILNADU


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal