முக அழகிரியை சகோதரியை வைத்து சரிக்கட்டும் ஸ்டாலின்.?! குடும்பத்துக்குள்ளே குடைச்சல்., முடிவு என்ன.?!  - Seithipunal
Seithipunal


தனிக் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக முக அழகிரி தெரிவித்து வரும் தகவல் தற்போது ஹாட் டாபிக் ஆக இருக்கின்றது. இது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையில், அவரது சகோதரி செல்வியை வைத்தே சமாதானத்திற்கு ஸ்டாலின் தூது விட்டதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால், இந்த சமாதானத்திற்கு அழகிரி ஒத்துக்கொள்ளவில்லை, என்னை அவமதித்தவர்களுக்கு நான் யார் என்பதை காட்டுகிறேன் என்று கொந்தளித்துள்ளார், ஆனால், செல்வி விடா முயற்சியை மேற்கொண்டு அவளுடைய பிடிவாதத்தை தற்போது தளர்த்தி இருக்கின்றார். 

எந்த கட்சிக்கும் நான் ஆதரிக்கவில்லை. புதிய கட்சியும் துவங்கவில்லை. ஆனால், அதே நேரத்தில் என்னுடைய சுயமரியாதையை பாதுகாக்கும் வகையில் ஏதாவது ஒரு பொறுப்பை கட்சியில் வழங்க வேண்டும். உதயநிதிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் போல் எனது மகன் துரை தயாநிதிக்கு கொடுக்க பட வேண்டும். 

இரண்டில் ஒன்றை மட்டுமே தருவதாக இருந்தால் எனது மகன் தான் முக்கியம். முதலில் இதை செய்யட்டும் பிறகு மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று டிமாண்ட் செய்துள்ளார். அழகிரி பேசியதை ஸ்டாலினிடம் பேசிய பொழுது பெரிய பூகம்பமே வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. முக.அழகிரி டிமாண்டை ஸ்டாலின் ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK ALAGIRI MAKES DEMANT TO STALIN


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->