#சென்னை || மின்சார ரயில் விபத்து - பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபத்து? வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் (பீச் ஸ்டேஷன்) கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரெயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது. 
 
பணிமனையில் இருந்து வந்த ரெயில் என்பதால் பயணிகள் யாரும் இல்லை. எனவே, உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 


 
மின்சார ரயிலில் பிரேக் செயலிழந்ததே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியான நிலையில், அந்த மின்சார ரயில் ஓட்டுநர் பவித்ரன் என்பவர் மட்டும் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியளது. 

இந்நிலையில், ரயில் ஓட்டுனர் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக  விசாரணையில் தெரியவந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து ஏற்பட்டபோது பிரேக் பிடிக்கவில்லை என தவறுதலாக ரயிலை இயக்கிய ஓட்டுனர் பவித்திரன் தெரிவித்ததாகவும், ஆனால் விசாரணையில் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை தவறுதலாக அழுத்தியது தெரியவந்திருப்பதாக ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ரயில்வே துறையின் விசாரணை அறிக்கைக்கு பின்பு ஓட்டுநர் பவித்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai ElectricTrain Accident info


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->