டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டத்தினால் ஏற்பட்ட குழப்பங்கள்! வெளியான உண்மை தகவல்! - Seithipunal
Seithipunal


மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையில் இன்று பேசப்படும் செய்தி - குரூப் 2 தேர்வுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கும் புதிய பாடத் திட்டத்தை பற்றி தான். 

ஏனெனில் இதற்கான முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்திருப்பதால் தான், இதை பற்றி பெரிதும் பேசுகிறார்கள். இதை பற்றிய தெளிவான விளக்கத்தை தேர்வாணையம் அறிவித்த போதிலும், பெரும்பாலான இளஞர்களுக்கு இன்னும் இந்த புதிய திட்டத்தை பற்றியும், மாற்றத்தை பற்றியும் தெளிவாக விளங்கவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.

புதிதாக கொண்டு வந்த பாடத் திட்டங்கள் என்ன.? அந்த திட்டம் என்ன மாற்றங்களை கொண்டு வரும்.? இதற்கான விடை இதோ.,! 

தேர்வில் கொடுக்க படும் மொழி தாளுக்கு என்று தனியே  கேள்வி தாள் இருக்க போவது கிடையாது. தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளுக்கும் இதே நிலை தான், அதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த மாற்றம் தமிழ் தெரியாதவர்கள் தேர்வெழுத கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டது என்று தேர்வாணையம் கூறுகிறது. இது உண்மை தானா என்று கேட்டால்., இது ஒருபக்க உண்மை தான். ஆனால் தமிழ் மொழி தாளில் நன்றாக எழுதினால், எளிதாக தேர்ச்சி பெறலாம் என்ற தற்போது இருக்கும் வழக்கம் இனி இருக்காது. இதனால் அதிகபட்சம் பாதிப்பு தமிழ் வழியில் பயின்று வந்த கிராமத்து இளைஞர்களாக தான் இருக்கும்.

இந்த இரண்டு உண்மைகளையும் ஒரே பார்வையில் பார்த்து, பின் இந்த திட்டத்திற்கான தீர்ப்பை கூறுவது தான் நியாயம். பயிற்சி மையங்கள், நகர்ப்புற மாணவர்கள், ஏற்கெனவே அரசுப் பணியில் இருக்கிற ஒருவரின் அன்றாட வழிகாட்டுதல் பெறக்கூடிய ‘வசதி' கொண்டவர்கள், புதிய மாற்றத்தால் பெரிதும் பலன் அடையலாம்.

பொது அறிவு (முதல் நிலைத்தேர்வு) - 10 அலகுகள் கொண்டது.

I. பொது அறிவியல் பக்கத்தில், சுற்றுச் சூழல் மற்றும் சூழலியல் - கடைசி இடத்தில் உள்ளது.
கேள்வித்தாளில் ஒருவேளை, முதலிடத்தில் வரலாம்.

III. இந்தியாவின் புவியியல் - போக்கு வரத்து - தகவல் தொடர்பு; சமூகப் புவியியல் -  முக்கியமாக, இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்; இயற்கைப் பேரிடர் - பேரிடர் மேலாண்மை, பருவநிலை மாற்றம் - பசுமை ஆற்றல் என பயனுள்ள பல தலைப்புகள் வரவேற்க கூடியதை இருக்கிறது.

IV இந்தியாவின் வரலாறும் பண்பாடும் VII இந்திய தேசிய இயக்கம் - என்று வழக்கமான பகுதிகள் உள்ளன. அலகு VIII தமிழகத்தின் வரலாறு மரபு பண்பாடு மற்றும் சமூக இயக்கங்கள் பகுதி, ஓர் இன்ப அதிர்ச்சி தருகிறது.

உலகப் பொதுமறை திருக்குறள் - மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மனதுக்கு இதமாக இருக்கிறது. பாராட்டுகள்.

முதன்மைத் தேர்விலும் இப்படித்தான். மிக நல்லது.

IX - தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம். கவனிக்கவும் - வெறுமனே ‘நிர்வாகம்' அன்று; ‘வளர்ச்சி நிர்வாகம்'! ஆணையம், தன்னிச்சையாகத் தந்த தலைப்பு என்று நம்புகிறோம். இதில் ஒரு தலைப்பு - ‘தமிழகத்தில் மின்னாளுகை'! தவறு இல்லை. ஆனாலும்..... நிறைவாக அலகு X - திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும். நன்கு வடிவமைக்கப் பட்டு இருக்கிறது.

இடையே, அலகு II நடப்பு நிகழ்வு கள், ஆட்சியியல் பகுதியில், பொது விழிப்புணர்வு, பொது நிர்வாகம், நலன்சார் அரசுத் திட்டங்கள் முதலானவை, முறை யான பள்ளிப்பாடத்தை விட்டு விலகி நிற்பவை. கிராமப்புற சாமான்ய இளை ஞர்கள், ‘அனுபவரீதியாக' மட்டுமே கற்றுக்கொள்ள முடிகிற கசப்பான சங்கதிகள் இவை.

அலகு V இந்திய ஆட்சியியல் - லோக் ஆயுக்தா, தகவல் உரிமை, நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள், மனித உரிமைகள் சாசனம் ஆகியன மிக நல்ல, ஆரோக்கியமான பகுதிகள்தாம். ஆனால் இவை எல்லாம், எமது கிராமப்புற இளைஞர்களுக்கு ‘அறிமுகம்' ஆகாதவை.

இதை தொடர்ந்து ‘விரிவான எழுத்து தேர்வு' பகுதியின் தொடக்கமே அதிர்ச்சி அளிக்கிறது. ‘தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தல்', ‘ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்' எந்த வகையில் கிராமத்து இளைஞர்களுக்கு சாதகமான பகுதியாக இருக்கும்.,?

Image result for tnpsc seithipunal

தமிழகத்தில், தமிழக அரசுப் பணியில் சேர, ஆங்கில மொழிபெயர்ப்புத் திறன் என்ன அத்தனை அடிப்படைத் தகுதியா...? சத்தியமாகப் புரியவில்லை.

ஓரளவுக்கு மட்டுமே ஆங்கிலம் பேசுவதும் எழுவதும் தண்டனைக்கு உரிய குற்றமா என்ன...? பக்கத்தில் ஒரு தமிழ் - ஆங்கில அகராதி வைத்துக் கொண்டால் போகிறது. தேர்வின் போது, அகராதி தரப்படுமா..? இல்லைதானே...? பிறகு...? நம்முடைய பார்வையில், தமிழக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வில், ஆங்கிலப் புலமை மிகவும் அத்தியா வசியம் ஆகிறது. ஒருவகையில், தமிழ் இளைஞர்கள் மீது ஆங்கிலம் திணிக்கப் படுகிறது. 

தமிழகத்தின் இசை மரபு, நாடகக் கலை, சமூகப் பொருளாதார வரலாறு, பெண்ணியம், இக்காலத் தமிழ்மொழி ஆகிய பகுதிகள் உண்மையிலேயே ‘சபாஷ்' போடவைக்கிறது.

ஆனாலும், ஏற்கெனவே தனியாக இருந்த மொழித்தாளைத் தக்க வைத்து இருக்கலாம். மேலும், தரமானதாக நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து இருக்கலாம். மொழி அறிவு, அதிலும் ‘உள்ளூர் மொழி' மாநில அரசுப் பணிகளில் மிக முக்கிய இடம் வகித்தாக வேண்டும். மாறாக, ‘உள்ளூர் அரசியல்' அந்த இடத்தைப் பிடித்து இருக்கிறது.

‘உள்ளூர் மொழியில் உலக அறிவு' என்கிற இலக்கை நோக்கி நகர்ந்து இருக்க வேண்டிய ஆணையம், ‘உலக மொழியில் உள்ளூர் அரசியல்' திசையில் பயணித்து இருக்கிறது.

சில இடங்களில் இத்திட்டத்தின் மாற்றங்கள் பாராட்டத்திற்குரியது என்றாலும்., பல இடங்களில் கிராமத்து இளஞர்களுக்கு கண்டினமாகவே இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tnpsc new syllabus full explain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->