காலாண்டு விடுமுறையில் திடீர் மாற்றம் செய்த தனியார் பள்ளிகள்! - Seithipunal
Seithipunal



தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கிழ் இயங்கும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அக்டோபர் 2 ஆம் தேதியுடன் காலாண்டு விடுமுறை முடிந்து, அக்டோபர் 3 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு முழுவதும் காலாண்டு தேர்வு நிறைவடைந்த உள்ள நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 8 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டது.  6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 8 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டாலும், தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 3 முதல் அனைத்து வகை தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட வேண்டும் என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியிருக்கறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private school announced reopening date after the quarterly leave


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->