நாளை முதல் மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை தொடங்க உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவை அண்மையில் முடிவுற்றது. இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு தேர்வானவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகம் அனைத்து மருத்துவ கல்வி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

தேசிய மருத்துவ ஆணையம் வழிகாட்டுதலின்படி, 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும் எனவும், கல்லூரிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் எனவும், கல்லூரி உணவுக் கூடங்களில் 50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நூலகங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், சுகாதாரத்துறையின் முறையின் அனுமதி இல்லாமல் விழாக்கள், கூட்டங்களை நடத்தக்கூடாது எனவும் அந்த சுற்றறிக்கயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்பறைகளில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டும் எனவும் அனைத்து மாணவர்களும் குருபூசை கண்டிப்பாக செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அருப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு தமிழக அரசு அனைத்து வகையான கட்டணங்களையும் செலுத்தி வருவதால், அவர்கள் எந்த விதமான கல்வி உதவித் தொகைக்கும் விண்ணப்பிக்க வேண்டாம் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களிடம், கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வு கட்டணம், உணவு மற்றும் விடுதி கட்டணம், புத்தக கட்டணம், வெள்ளை அங்கி கட்டணம், ஸ்டெதஸ்கோப் கட்டணம், பல்கலைக்கழக பதிவு கட்டணம் உள்ளிட்ட எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்க கூடாது என்றும், கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட நடைமுறையே இந்த ஆண்டும் அவர்களுக்கு பின்பற்றப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MBBS first year classes


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->