ஆன்லைனிலேயே அரசு வேலை வாய்ப்பு.! புது இணையதளம் துவங்கிய தமிழக அரசு.!  - Seithipunal
Seithipunal


ரூ.2 கோடி செலவில் தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இணையத் தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

 ரூ.2 கோடி செலவில் https://www.tnskill.tn.gov.in/ என்ற இணையதளம் தமிழக திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி இதனை தொடக்கி வைத்தார். இந்த வெப்சைட்டின் மூலமாக இணைய வழிச்சான்றிதழ்கள், ஆதார் எண் வருகைப்பதிவேடு பராமரித்தல் ஆகிய அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியும் என்று அரசு கூறியுள்ளது. 

அதுபோல, கலிபோர்னியாவை சேர்ந்த முன்னணி நிறுவனமாக இருக்கும் கோர்ஸெரா நிறுவனம் என்ற நிறுவனத்துடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 50,000 பேருக்கு இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும், இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யும் என்றும் கூறியுள்ளது. மேலும், ரூ.20 கோடி மதிப்பில் தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் கட்டுமான பிரிவில் உயர்தர திறன் மேம்பாட்டு மையம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jobs for students online


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->