ஏர்போர்ட்டில் வேலை செய்ய ஆசையா? உடனே விண்ணப்பிக்கலாம்.!
job vacancis in airport
ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின், ’ஏஏஐ ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்’ பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள பட்டதாரிகள், அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aai.aero மூலம் இன்று நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: அதிகபட்சம் வயது 27 .
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ1000.

கல்வித் தகுதி: இயற்பியல் மற்றும் கணிதத்துடன், பிஎஸ்சி அறிவியலில் 3 ஆண்டுகளுக்கான முழுநேர படிப்பாக இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முழுநேர பிஇ இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். செமஸ்டர் பாடத்திட்டத்தில் ஏதேனும் ஒன்றில் இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்களாக இருப்பது அவசியம்.
தேர்வு நடைமுறை: ஆன்லைன் வாயிலாகவே நடைபெறும். தேர்வில் தவறான விடைகளுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். அதற்கு www.aai.aero என்ற தளத்தை அணுகி விண்ணப்பப் படிவத்தை முறைப்படி நிரப்பி சமர்பிக்கலாம். அதனுடன் ஆவணங்களை பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தி விடலாம்.