சவூதியில் மருத்துவர் பணியில் சேர பெங்களூரில் நேர்காணல் - முழு விவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


தமிழக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- "மருத்துவர் பணிக்கு, முதுகலைப் பட்டம் பெற்ற அனுபவம் உள்ள மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம். 

இதேபோல், செவிலியர் பணிக்கு இளங்கலை செவிலியர் பட்டப் படிப்பு முடித்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான நேர்காணல் பெங்களூரில் உள்ள தாஜ் யஷ்வந்தபூர் ஹோட்டலில் நாளை முதல் வரும் 16ம் தேதி வரை நடைபெறுகிறது.

பணியாளர்கள் வேலை குறித்த விவரங்கள் மற்றும் ஊதியம் உள்ளிட்டவைக் குறித்து தெரிந்துகொள்ள அயல்நாட்டு வேவைவாய்ப்பு நிறுவன கைப்பேசி எண்கள் 9566239685, 6379179200 மற்றும் 044 – 22505886/22502267) என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். 

இந்தப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் https://omcmanpower.com/regformnew/registration.php?type=mohksmc எனும் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்தப் பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடம் இருந்து சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும்.

இந்த நிறுவனத்தின் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணியிடங்கள் குறித்த விவரங்களை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

interview in banglore for doctor and nurse job in saudi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->