வேகமெடுக்கும் பொறியியல் சேர்க்கை..!!  தொடங்கியது கலந்தாய்வு!! - Seithipunal
Seithipunal


இந்த வருடம் 479 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்களுக்கு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண் சம வாய்ப்பு எண் கொடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றன.

இதில் அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்ற, இதற்கு தகுதியான ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 150 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 20 ஆம் வெளியானது.

சென்னையில் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். அதில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயர்களும், புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த அரவிந்த், ஹரீஷ் பிரபு, பிரதீபா செந்தில் ஆகிய மூன்று பேர் 200 க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று சம வாய்ப்பு எண் அடிப்படையில் உள்ளனர்.

இந்தநிலையில், சென்னையில் சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று (ஜூலை 3) ஆம் தேதியில் தொடங்கி  ஜூலை 28ஆம் தேதி வரை  3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

engineering admission start


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->