இளங்கலை படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு முடிவுகள்: செப்டம்பர் 15-ம் தேதி வெளியீடு - ஜகதீஷ் குமார் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தோ்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு நிர்வாகி ஜகதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. இதற்கான தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வரும் 15-ஆம் தேதி வெளியிடும் என்று பல்கலைக்கழக மானியக் குழு நிர்வாகி ஜகதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

ஜகதீஷ் குமாா் கடந்த மாா்ச் மாதம், மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு நுழைவுத் தோ்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவா் சோ்க்கை நடைபெறும் என்றும், 12-ம் வகுப்பு தோ்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடப்பாண்டு நடைபெற்ற இளங்கலை படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வில் பங்கேற்பதாக 44 மத்திய பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், 19 தனியாா் பல்கலைக்கழகங்கள் ஆகியவை அறிவித்திருந்தன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuet ug results announce in september 15


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->