+1 மற்றும் +2 தேர்வுகள் கால தாமதாக துவங்க உயர் நீதிமன்றம் அறிவுரை.! - Seithipunal
Seithipunal


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 14616 பேர் உயிரிழந்து உள்ளனர். 3 லட்சத்து 36 ஆயிரத்து 838 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரசால் 415 பேராக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா வைரசால் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். 18,383 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

நேற்று கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் மக்கள் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தனர். ஆகையால் குறைந்த அளவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.

இதனால், மாணவ மாணவிகள் கொரோனா அச்சறுத்தலால் சரியான நேரத்தில் தேர்வு மையத்திற்கு வருவதற்கு அதிகளவு நேரம் ஆகும். இதனால் நேரத்தை அரைமணிநேரம் அதிகரிக்க நீதிபதிகள் அறிவுரை. மாணவ - மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை செய்யப்பட்டு, சானிடைசர் கிருமி நாசினி வழங்கப்பட்ட பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதி செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court says about 11 and 12 exam time


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->