மத்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படைப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்கும் என தேசிய மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. அகில இந்திய அளவில் 15% ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு  வரும் ஜூலை 20ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நான்கு சுற்றுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் ஆன்லைன் மூலம் நடைபெறும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 16,17 ஆகிய தேதிகளிலும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 6,7 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.

இந்த கலந்தாய்வு காண தரவரிசை பட்டியல் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீதம் மத்திய அரசின் ஒதுக்கீட்டின் இருக்கும் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசின் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புகளில் சேர 40,193 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Counseling date announced for Medical Courses under Central Quota


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->