உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகள்!! அண்ணா பல்கலைக்கழகம் போட்ட அதிரடி உத்தரவு!!  - Seithipunal
Seithipunal


உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் பாதியாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையின் போது நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகள், மாநில பல்கலைக்கழகங்கள் மூலமாக, இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் செயல்படும் கல்லூரிகளுக்கு இந்த அனுமதியை கொடுக்கும் முன், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் கல்லூரிகளின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்படும். 

அதுபோல, இந்தாண்டு விண்ணப்பித்த 92 கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது பற்றி தெரிய வந்துள்ளது. இதனால் அந்த வசதிகள் இல்லாத கல்லூரிகளில், அந்த 92 பொறியியல் கல்லூரிகளின் இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் பாதியாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anna university new announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->