10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு.. தமிழ்நாட்டில் ஒரே ஒரு மாணவன் மட்டும் இந்த பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

12ம் வகுப்பில் - 93.76% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு - 94.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 8.55% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.  97.12% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2வது இடம் பிடித்துள்ளது.  95.96% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.95% மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.27% மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2வது இடம்  பிடித்துள்ளது.  97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், தமிழ்நாட்டில் ஒரே ஒரு மாணவன் மட்டுமே தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அசத்தி உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th class result one student for tamil 100 100


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->