உங்களுக்கு இன்னும் திருமணம் கைகூடவில்லையா? இன்றே இதே செய்யுங்கள்! மறந்து விடாதீர்கள்!! - Seithipunal
Seithipunal


சிவபெருமானை வழிபட உகந்ததா நாள் பிரதோஷம் ஆகும். பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.  இந்த ஆண்டின் முதல் பிரதோஷம் இன்று. இன்று விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும். 

பிரதோஷ காலம் எது?

வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் திரயோதசி திதியில் கதிரவன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள நேரமே பிரதோஷ காலமாகும்.

சனி பிரதோஷம் என்றால் என்ன?

சிவபெருமான், தேவர்களைக் காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே பிரதோஷ நேரம் சனிக்கிழமையன்று வந்தால் சனி பிரதோஷம் எனச் சிறப்பு பெறுகிறது.

மஹா பிரதோஷம் :

சிவபக்தர்களுக்கு சனி பிரதோஷம் மிகவும் முக்கியமானது. அது போலவே சித்திரை மாதம் வளர்பிறை திரியோதசி திதியில் வரும் பிரதோஷ நாளே மஹா பிரதோஷம் ஆகும்.

நித்திய பிரதோஷம் :

அனுதினமும் சூரியமறைவிற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நட்சத்திரங்கள் தோன்றும் வரை நித்திய பிரதோஷம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today pradosham God Sivan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->