திருப்பத்தை உண்டாக்கும் மறுமணம்... எதனால் ஏற்படுகிறது? - Seithipunal
Seithipunal


திருமணம் செய்யும்பொழுது பெரியோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என பலரும் இணைந்து அவர்களின் நல்லாசியுடன் தம்பதிகளை இணைத்து வைக்கின்றனர். கிரக நிலைகளை ஆராய்ந்து அவர்களையும் ஜோதிடர்கள் இணைத்து வைக்கின்றார்கள்.

மனிதர்கள் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்தாலும் ஒரு மனிதனுக்கு ஏற்படும் மரணம் என்பதை அறிந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம்.

பல பொருத்தங்களில் மற்றும் பலவிதமான கோணங்களில் ஆராய்ந்து மணமக்கள் இணைந்து தம்பதிகளாக வாழ்கின்றனர். இதில் ஒரு சில நேரங்களில் ஒருவர் இறந்து, ஒருவர் வாழ வேண்டிய சூழலையும் உருவாக்குகின்றது. இச்சூழலில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றன. ஏனெனில் ஆண்கள் இல்லாத பெண்களை 'விதவை" என்று சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். ஆனால் நடைமுறையில் இம்முறைகளில் பலவிதமான மாற்றங்கள் இவர்கள் வாழ்க்கையிலும் நிகழ்கின்றது. விதவைகள் மறுமணம் செய்வது போன்ற நிகழ்வுகள் இவர்களுக்கு புதுவிதமான வாழ்க்கையை உருவாக்குகின்றது.

சிறு வயதில் தனது துணைவரை இழந்த பெண்களுக்கு இந்த மாற்றமானது அவர்களின் வாழ்க்கையில் மீண்டும் ஆதவனை காண்பதற்கான சூழலை உருவாக்குகின்றது. இதுவும் ஜாதகரீதியான அடிப்படையில் அம்சங்கள் இருக்கும் பட்சத்திலேயே கிடைக்கும். இரண்டாம் வாய்ப்பானது அவர்களுக்கு நல்ல முறையிலும் அமைகின்றது. பலருக்கு இந்த வாய்ப்புகள் கிடைத்தும் கசப்பான அனுபவங்களாக வாழ்ந்து இருப்பதையும் நாம் நடைமுறையில் பலரின் வாழ்க்கையில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

எனவே, ஒருவருக்கு திருமணம் என்பது அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளுக்கு ஏற்பவும் திசாபுத்திகளின் அடிப்படையில் நடைபெறுகின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒருவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெறுவதற்கான காரணங்கள் என்ன என்பதை பின்வருவனவற்றில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு பெண்ணிற்கு மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு திருமணம் செய்து வைக்கும் பொழுது மணமகனின் ஆயுள்பலம் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஒருவேளை பெண்ணிற்கு களத்திர ஸ்தானத்தை விட லாப ஸ்தானம் வலுத்து இருந்தாலும் அவர்களுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அமைகின்றது.

இவ்விதியானது ஆணுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகும். ஒருவருக்கு ஏற்படும் மரணம் என்பது தன்னுடைய வாழ்கை துணைவரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளைப் பொறுத்து மட்டும் அமைவதில்லை. அவர்களின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொருத்து ஒருவருக்கு மரணம் என்பது நிகழ்கின்றது.

களத்திர ஸ்தானதிபதி பலமிழந்து லாப ஸ்தானதிபதி பலம் பெற்றாலும் அவர்களுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இவ்விதமான ஜாதக அமைப்பு உள்ளவர்கள் இளம் வயதில் திருமணம் செய்வதை காட்டிலும் காலம் கடந்து திருமணம் செய்வது இவர்களுக்கான சிறந்த பரிகாரமாகும்.

திருமணத்தில் எப்பொழுதும் பெண்ணின் ஜாதகமே முதன்மையாக கருதப்படுகிறது. ஏனெனில் ஒரு பெண்ணானவள் மட்டுமே ஒரு குடும்பத்தையும், ஒரு குலத்தையும் அபிவிருத்தி செய்யக்கூடியவள். அதன் பொருட்டே திருமணப் பொருத்தங்களும் திருமணம் தொடர்பான மற்றும் சுபநிகழ்ச்சிகள் யாவற்றிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marumanam


கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
Seithipunal