குழந்தைக்கு தொட்டிலை எப்படி கட்டுவது? அதனால் கிடைக்கும் நன்மைகள்.!! - Seithipunal
Seithipunal


தாயின் வயிற்றில் பாதுகாப்பாக இருந்த குழந்தைக்கு வெளியில் வந்ததும் நம் சுற்றுப்புற சூழ்நிலைகள் எல்லாம் வித்தியாசமானதாக இருக்கும். உங்கள் குழந்தைக்கு எந்த தொட்டில் சிறந்தது? அவர்களை எப்படி தூங்க வைக்க வேண்டும்? எப்படி தூங்கினால் சௌகரியமானதாக உணர்வார்கள் என்பதை காண்போம்.

தொட்டிலை எப்படி கட்டுவது?

குழந்தைக்கு தூளியினை கட்டும்போது பருத்தியால் ஆன சேலைகளையோ அல்லது பருத்தியால் ஆன வேட்டியினையோ எடுத்து கயிற்றால் முடித்து கொக்கியில் மாட்டி தொட்டில் போன்று அமைத்து குழந்தையை தூங்க வைப்பது நல்லது. சேலை மற்றும் வேட்டியால் ஆன தொட்டிலை தான் நாம் தூளி என்று சொல்கிறோம்.

தூங்கும் குழந்தையை காத்து, கருப்பு அண்டக்கூடாது என்பதற்காக தொட்டிலின் கீழே இரும்பு மற்றும் சீமாறு ஆகியவற்றை போட்டு வைப்பதும் வழக்கமாக இருந்தது. இன்றளவும் பல வீடுகளில் தாயின் புடவையே குழந்தைக்குத் தொட்டில். அது பாதுகாப்பான உறக்கத்தை குழந்தைக்கும் தரும்.

எப்போது செய்ய வேண்டும்?

நாமகரணம் செய்த அன்று மாலை குழந்தையைத் தொட்டிலிடுதல் என்பது ஒரு சம்பிரதாயம். உற்றார், உறவினர், அக்கம்-பக்கத்திலுள்ளவர்கள் கலந்து கொள்வார்கள். பெண்களுக்கு குங்குமம், சந்தனம், தாம்பூலம் வழங்குவார்கள். சர்க்கரை, சுண்டல் கொடுப்பார்கள். இதை சக்தியானுசாரம் கொண்டாடுவது வழக்கம். பாகவதத்தில் கிருஷ்ணனுக்குத் தொட்டில் இட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆங்காங்கு சில சரித்திரங்களிலும் கூறப்பட்டிருந்தாலும் வைதீகச் சடங்காக இது கொள்ளப்படவில்லை. ஆனால் பழக்கத்தில் தொட்டில் இடுதல், காப்பிடுதல் போன்ற சில சம்பிரதாயங்கள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.

குழந்தை பிறந்த 10, 12, 16 மற்றும் 22ம் நாளில் தொட்டிலில் இடும் பழக்கமாக உள்ளது. குழந்தையை தொட்டிலில் இடும் நிகழ்ச்சிக்கு ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திராடம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, நட்சத்திரங்களும், துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரியோதசி ஆகிய திதிகளிலும் ஏதேனும் ஒன்று வரும் நாளைத் தேர்ந்தெடுத்து, அன்றைய தினத்தில் குழந்தையை தொட்டிலில் இட வேண்டும்.

தொட்டில் வகைகள் :

பழங்காலத்தில் குடும்ப வசதியை வெளிப்படுத்தும் விதமாக அம்மாவின் புடவை தொடங்கி தேக்கு மரத்தால் செய்யப்பட்ட மரத்தொட்டில்கள் வரை பயன்படுத்தப்பட்டன. இப்போது கடைகளில் பவுன்சிங் சேர், ராக்கி சேர், ஸ்பிரிங் தொட்டில், கேன்வாஸ் மற்றும் ஸ்டீலால் செய்யப்பட்ட பலவகை தொட்டில்கள் கிடைக்கின்றன.

குழந்தைக்கு தொட்டிலினால் கிடைக்கும் நன்மைகள் :

தாயின் அருகில் இருப்பதை போன்று நெருக்கத்தை தரும்.

குழந்தையின் முதுகெலும்பை பாதுகாக்கும்.

பூச்சி, வண்டு போன்றவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கும்.

குழந்தைகள் புரண்டு படுக்கும் பொழுது கீழே விழும் பாதிப்புகள் இல்லை.

தொட்டில் ஆட்டும் பொழுது தாயின் முகத்தின் குழந்தை பார்ப்பதால் மாறுகண் பிரச்சனை ஏற்படாது.

குழந்தை சிறுநீர் கழிக்கும் பொழுது சிறுநீர் துணியின் வழியே வெளியேறி விடுவதால் குழந்தைக்கு எரிச்சல் ஏற்படாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby rocker


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->