டாஸ்மாக்கில் ஜீ தமிழ் சீரியல் நடிகை.! மதுபானம் வாங்கும் வீடியோ வைரல்.!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட 7C உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ஸ்ரீநிதி. இவர் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்திருந்தார். தொடர்ந்து தற்போது புது புது அர்த்தங்கள் சீரியலிலும் நடித்து வருகிறார். 

சமீபத்தில் நடிகை ஸ்ரீநிதி வலிமை படத்தை பார்த்துவிட்டு வெளியிட்ட விமர்சனம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிதி கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். 

இது ரசிகர்கள் அவரை பின்தொடர காரணமாக இருந்து வந்தது. இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நண்பர்களுக்காக டாஸ்மாக் சென்று மதுபானங்களை வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. 

ஆனால் இது பற்றி எல்லாம் கவலைப்படாத ஸ்ரீநிதி, "குறை சொல்பவர்கள் குறை சொல்லிக்கொண்டே இருக்கட்டும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. நான் நானாக வெளிப்படையாக வாழ விரும்புகிறேன்.: என்று தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

zee tamil serial actress srinithi tasmac video viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->