பதான் படத்தை வெளியிட எதிர்ப்பு..  தியேட்டருக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது‌! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சித்தார்த் ஆனந்த்தின் இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் மற்றும் ஷாருக்கான் மற்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் பதான்.

இந்த படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 25-ல் வெளியாகவுள்ளது. இதில், இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் என்ற பாடல் வெளியாகி ஆபாசத்தின் உச்சமாக இருப்பதாக பல சர்ச்சைகளும் கிளம்பியது.

இந்த பாடல் இதுவரை 15 கோடிக்கும் மேலான பார்வையாளர்களை கடந்து யூடியுப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து இருக்கின்றது. இதில், தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடையில் ஒட்டு மொத்த கவர்ச்சியும் காட்டி ஆபாசமாக ஆடியிருப்பார். இதற்கு, இந்து அமைப்பினர், பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் பதான் படத்தை திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என தியேட்டர் உரிமையாளர்களை இளைஞர் ஒருவர் மிரட்டியுள்ளார். அதன்படி வீடியோ மூலமாக எந்த திரையரங்கு உரிமையாளரும் பலன் படத்தை திரையரங்குகளில் வெளியிடக் கூடாது அவ்வாறு வெளியிட்டால் தீ வைத்து கொளுத்தப்படும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மிரட்டல் விடுத்த இளைஞரை அகமதாபாத் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young warning to pathan movie not release


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->