கோமாளி பட இயக்குனருடன் இணைந்த யோகி பாபு.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கோமாளி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் ஹீரோவாக ஜெயம்ரவி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கனதன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

மேலும், இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு  நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogibabu in pradeep Ranganathan movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->