யாஷிகா நடிக்கும் ''படிக்காத பக்கங்கள்'' டீசர் அப்டேட்! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா நோட்டா, ஜாம்பி போன்ற திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். யாஷிகா தோழிகளுடன் காரில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா தற்போது படங்களில் நடித்து வருகிறார். 

4 படங்களில் தற்போது பிசியாக இருக்கும் யாஷிகா செல்வம் மதப்பம் இயக்கத்தில் ''படிக்காத பக்கங்கள்'' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

எஸ் மூவி பார்க், பவுர்ணமி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வருகின்ற மார்ச் 24ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yashika movie update


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->