3 மணி நேரம் மேக்கப் போடும் யாஷிகா..!! - Seithipunal
Seithipunal


S3 பிக்சர்ஸ் தயாரித்து யாஷிகா ஆனந்த், யோகி பாபு , நடித்த ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் நாயகி யாஷிகா ஆனந்த், இயக்குனர் புவன் நல்லான், இசையமைப்பாளர் பிரேம்ஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய யாஷிகா ஆனந்த், நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் கேமரா மேன் வேலை தான் மிகவும் முக்கியமானது. அந்த பொறுப்பை உணர்ந்து கேமராவை எல்லா கோணத்திலும் வைத்து கடினமாக உழைத்திருக்கிறார்.

அதே போல தான் நடன இயக்குனரும் என்னக்கேற்றவாறு நடனம் அமைத்து கொடுத்தார். இரவு பகலாக படப்பிடிப்பு நடந்தது. அனைவரும் ஒரு குடும்பத்தை போல தான் பணியாற்றினோம். மேக்கப் போடுவதற்கு 3 மணிநேரம் ஆகும் என்று கூறியுள்ளார்.

பின்னர் பேசிய புவன், யோகி பாபு எனக்காகவே இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டார். நல்ல கூட்டணி அமைந்ததில் மகிழ்ச்சி. இந்த மாதிரியான படம் எடுக்கும்போது தொழில்நுட்ப கலைஞசர்களின் உதவி பெரும்பங்கு இருக்கும். எனக்கு அது இந்த படத்தில் நன்றாகவே அமைந்துள்ளது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yaasika anandh makeup an hours


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->