மலையாள இயக்குனர் மீது பரபரப்பு புகார் கூறிய இளம் பெண் ஆடை வடிவைமைப்பாளர்..! - Seithipunal
Seithipunal


பிரபல ஆடை வடிவமைப்பாளர் லிஜி பிரேமன். இவர் 'வேட்டையன்' உள்ளிட்ட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மலையாள இயக்குனர் ஒருவரை பற்றி புகார் அளித்திருந்தார்.

அந்த பேட்டியில், "மலையாள இயக்குனர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கிய "சுரேஷிண்டேயும் கமலதாயுதேயும் ஹ்ருதயஹரியாய ப்ரணயகதா" என்ற படத்தில் நான் ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்தேன். முன்னதாக மோகன்லாலின் பரோஸ் மற்றும் ரஜினியின் வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நான் வேலை செய்துள்ளேன். 

இப்படங்களில் என்னுடைய வேலையை பார்த்து தான் 'சுரேஷிண்டேயும்' படத்தில் வேலை செய்ய என்னை படக்குழு அணுகினார்கள். 110 நாட்கள் இந்த படத்திற்காக நான் வேலை செய்தபோது, இயக்குனர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் மூலம் பல்வேறு பிரச்சினைகளை நான் சந்தித்தேன். 

 

அவரது ஈகோவால் என்னை அவரது அடிமை போல் நடத்தினார். மன உளைச்சல் அதிகமானதால் நான் அப்படத்திலிருந்து விலகி விட்டேன். ஆனால் 75 சதவீத வேலைகளை முடித்துவிட்டே வெளியேறினேன். இந்நிலையில் எனக்கு பேசிய சம்பளத்தையும் தராமல், படத்தின் டைட்டில் கார்டில் ஆடை வடிவமைப்பாளராக வேறு ஒருவர் பெயரை  போட்டு இருந்தார்கள்.

படம் வெளியானபோது என்னால் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று தான் அமைதியாக இருந்தேன். ஆனால் இப்போது படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும்போது எனக்கான அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக நான் நீதிமன்றத்தை நாடியுள்ளேன்" என்று லிஜி பிரேமன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women Fashion Designer Gives Sensational Complaint on Mallu Director


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->