இவர் படம்ன்னாலே பிரச்சனைதான்....? விடாது கருப்பாக துரத்தும் சர்ச்சைகள்! - Seithipunal
Seithipunal


ரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு அடுத்து குறுகிய காலத்திலேயே 100 கோடி வசூலித்த படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். இதனால் இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர்.   இந்நிலையில், ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்றவர்களை வைத்து பல ஹிட் படங்களை இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப்போவதாக செய்தி வந்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. 

முருகதாஸ், கடைசியாக ரஜினி நடிப்பில் 'தர்பார்' படத்தினை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இதனையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் படத்தின் வாயிலாக ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக பூஜையுடன் இப்படம் துவங்கியது.கடந்த சில தினங்களுக்கு முன்பாக தான் இவரும், ஏ.ஆர். முருகதாஸும் இணையும் 'எஸ்கே 23' பட வேலைகள் துவங்கின. இந்நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் 'எஸ்கே 21' படத்தில் நடித்து வருகிறார். 'இவருக்கு ஜோடியாகியுள்ளார் சாய் பல்லவி.  முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வந்தன. 

இந்நிலையில்  இந்த படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  'எஸ்கே 23' படத்தில் வெளிமாநில அவுட்டோர் யூனிட் ஆட்களை பயன்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இனி எந்த படங்கள், சீரியல்கள் ஆகியவற்றுக்கு அவுட்டோர் யூனிட்களை வழங்க  கூடாது என தென்னிந்திய அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.  இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளனர். 

படப்பிடிப்பு துவங்கும் முன்னரே 'எஸ்கே 23' படம் பிரச்சனையில் சிக்கியுள்ளது , பிரச்னையும், சிவகார்த்திகேயனும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் போல என கலாய்க்க தொடங்கியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will this be a problem for the film? Controversies that chase SK without leaving!


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->