வெந்து தணிந்தது காடு.. கூல் சுரேஷுக்கு ஒரு ஐபோனை பரிசா போடு.! - Seithipunal
Seithipunal


வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு புரொமோஷன் செய்த கூல் சுரேஷுக்கு ஐபோன் ஒன்றை பரிசளித்ததுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் தான் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பஞ்சாப் மாடல் சித்தி இட்னானி நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், அப்புகுட்டி உள்ளிட்ட திரைப்படங்கள் பலரும் நடித்திருந்தனர்.

இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இந்த படம் கடந்த செப்டம்பர் 15-ல் தியேட்டர்களில் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றி பெறா விட்டாலும், வசூல் ரீதியாக இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனையடுத்து வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு சொகுசு காரும் மற்றும் இயக்குநர் கவுதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்ட் பைக்கையும் பரிசாக வழங்கினார்.

இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு விடாமல் ப்ரோமோஷன் செய்த நடிகர் கூல் சுரேஷுக்கு ஐபோனை பரிசாக வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். அதுமட்டுமில்லாமல் நடிகர் கூல் சுரேஷின் குழந்தைகளின் படிப்பு செலவையும் ஐசரி கணேஷ் ஏற்றுள்ளதாக கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VTK Producer isari Ganesh gift iPhone to cool suresh


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->