ஹரி-விஷால் வெற்றி கூட்டணியின் "விஷால் 34" படபிடிப்பு இன்று ஆரம்பம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2007ல் நடிகர் விஷால் இயக்குனர் ஹரி கூட்டணியில் வெளியான தாமிரபரணி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. குடும்ப செண்டிமெண்டையும் ஆக்‌ஷனையும் இணைத்து சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்ததே இதற்கு காரணம். அதன் பிறகு கடந்த 2014ல் இதே கூட்டணியில் உருவான பூஜை திரைப்படத்தின் மீது மாறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் நடிகர் விஷாலின் ‘விஷால் 34’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள படத்தில் மீண்டும் விஷால் ஹரி கூட்டணி இணைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது.

இந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தூங்குவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விஷால் 34 படத்திற்குநடிகை பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

எம்.சுகுமார் ஒளிப்பதிவாளராகவும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியாளராவும், பாடலாசிரியராக விவேக் ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். தேவி ஸ்ரீ பிர்சாந்த் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். ஏற்கனவே நடிகர் விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி, துப்பறிவாளன்2 படங்கள் வெள்ளி திரையில் ஜொலிக்க காத்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishal 34 movie shooting will begin today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->