இப்போ தான் அட்லீயோட அருமை தெரியுதா.?! தீவிர ஆலோசனையில் விஜய்.?!  - Seithipunal
Seithipunal


நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும் யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக இல்லை என்று கூறப்படுகிறது. 

சமூக வலைதளங்களில் இதுகுறித்த மீம்ஸ்கள் தற்போது வைரலாகி வருகின்றது. திரைப்படம் படம் மிகவும் மோசமாக இருக்கிறது என்று விஜய் ரசிகர்களே பேட்டி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து மீண்டும் அட்லீ நடிப்பில் படம் நடிக்கலாமா என்று நடிகர் விஜய் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, தெறி மற்றும் மெர்சல் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay thinking about atlee after beast movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->