அஜித்துக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி.?! AK61 குறித்த அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து அஜித் நடித்த திரைப்படம் தான் வலிமை. இதில் யுவன் இசையமைக்க அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹீமோ குரோஷி நடித்திருப்பார். 

இந்த படம் கடந்த 24ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலருக்கும் வலிமை படம் குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. 

இந்த படத்தை பார்த்துவிட்டு பல பிரபலங்களும் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், சமீபகாலமாக அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. Ak61 என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை வரும் மார்ச் 9ஆம் தேதி நடக்கவுள்ளதாகவும், மார்ச் 18ல் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதியை படக்குழு அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தில் தளபதிக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தற்போது அஜித்துக்கும் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படும் தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay sethupathy next Movie in H vinoth


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->