நடிகர் விஜய் சேதுபதியும், ராதிகா ஆப்தேவும் இணைந்து நடிக்கும் புதிய படம்; விரைவில் ரிலீஸ்! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பி.ஆறுமுக குமார் இயக்கும் படத்துக்காக நடிகர் விஜய் சேதுபதி மலேசியா சென்றுள்ளார்.இவர் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ருக்மணி வசந்த், பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு என பல நடிகர்கள் நடிக்கின்றனர்.விஜய் சேதுபதி ஏற்கனவே, ‘மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படத்தை நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கேத்ரினா கைஃப் நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த் என பலர் நடிக்கின்றனர்.

இயக்குனர், ஸ்ரீராம் ராகவன் இயக்கி வரும் இந்த படம் தமிழ், இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தியில் ஏற்கனவே வெளிவந்த ‘ஜானி கட்டார்’, ‘ஏஜென்ட் வினோத்’, ‘பட்லாபூர்’, ‘அந்தாதுன்’ உட்பட சில படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் 2022 டிசம்பர் மாதம் வெளியாவதாக இருந்த இப்படம், சில காரணங்களால் வரும் டிசம்பருக்கு படத்தின் வெளியீடு தள்ளிப் போயிருக்கிறது. இந்த படத்தில், கூடுதல் தகவலாக கவுரவ வேடத்தில், நடிகை ராதிகா ஆப்தே நடிக்கிறார். அவரின் கதாபாத்திரம் குறித்து படக்குழு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay sethupathi acts with Radhika aaptey


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->