திரைப்படமாக உருவாகும் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறு.. ஹீரோ யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி திரைப்படமாக எடுப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு 'ராமையா' என பெயிரிடப்பட்டுள்ளது. மேலும், பட தலைப்பின் கீழ் 'கிங் ரைஸ்டு பை பிபிள்' என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகும் திரைப்படத்தை சத்யா ரத்தினம் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'கதலேகானா' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான சித்தராமையா கேரக்டரில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விஜய் சேதுபதியின் கால்ஷீட்டை பொறுத்து படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் கடைசி 20-30 நிமிட காட்சிகளில் சித்தராமையா தோன்றுவார் எனவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் மேலும், சில கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர்களும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு சாதாரண வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய சித்தராமையா இன்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உச்சத்தை தொட்ட கதையை காட்சி வடிவில் காண அவரது கட்சி தொண்டர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay sethupathi Act in siddaramaia biopic


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->