'குஷி' பட வெற்றிக்கு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த விஜய் தேவரகொண்டா!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தேவர்கொண்டா 'குஷி' பட வெற்றிக்கு தெலுங்கானாவில் உள்ள யாதாத்ரி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற வழிபாடு செய்துள்ளார். 

கடந்த 1 ஆம் தேதி விஜய் தேவர்கொண்டா-சமந்தா நடிப்பில் வெளியான படம் 'குஷி'. மேலும் இந்த படத்தில் ஜெயராம், ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்ட பல நடித்துள்ளனர். 

ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைத்துள்ள இந்த படத்தை ஷிவ நிர்வாணா இயக்கியிருந்தார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. 

இந்த படம் தமிழில் கலவையான விமர்சனமும் தெலுங்கில் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது. இருப்பினும் இந்த படம் வசூல் ரீதியாக எந்த குறையும் வைக்கவில்லை. 

இந்த திரைப்படம் வெளியாகி 2 நாட்களில் ரூ. 51 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் நடிகர் விஜய் தேவர்கொண்டா 'குஷி' பட வெற்றிக்கு தெலுங்கானாவில் உள்ள யாதாத்ரி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று இன்று வழிபாடு செய்தார். 

அப்போது அவர் முழு பாரம்பரிய உடையில் இருந்தார். இந்த புகைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Devarakonda went to temple worship for success Kushi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->