"மாஸ் அப்டேட்" விஜய் 68... மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் இணையும் விஜய்.! ரிலீஸ் டேட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய வெற்றியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு த்ரிஷா மற்றும் மன்சூர் அலிகானுடன் இணைந்து நடிக்கிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முதற்கட்டமாக காஷ்மீரில் நடைபெற்று முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்க இருக்கின்றன.

இந்நிலையில் தளபதியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு  வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது. தளபதி 68 திரைப்படத்திலும்  விஜய் தெலுங்கு இயக்குனருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான கோபிசந்த் என்பவர் இயக்கத்தில்  தனது 68வது திரைப்படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் செப்டம்பர் மாதம் துவங்கி அடுத்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் திரைப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம் சார்பில் பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி  தயாரிக்க இருக்கிறாராம். சூப்பர் குட் பிலிம்ஸ் விஜய்க்கு பூவே உனக்காக போன்ற பல மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay 68 movie with Telugu director will release in April 14


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->