ஊர்க்குருவி கவினுக்கு வாழ்த்துக் கூறிய விக்னேஷ் சிவன்.! வெளியிட்ட ஸ்பெஷல் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமடைந்த கவின் அதன்பின்னர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். அவருக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவுடன் காதலில் விழுந்தார். 

இவருக்கு மிகப்பெரிய ஆர்மியே உருவாகியது. ஆனால், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் இருவருமே தங்களது காதலை வளர்க்காமல் தங்களது கேரியரை வளர்க்க கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இவர்களது காதலை போற்றிய ரசிகர்களுக்குத்தான் இது மிகவும் வருத்தத்தை கொடுத்தது. 

இந்த நிலையில் லிப்ட் படத்தில் அமிர்தா ஐயருடன் சேர்ந்து நடித்து இருந்தார். அடுத்ததாக ஆகாசவாணி படத்தில் சமீபத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் தற்போது நடிகர் கவின் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் 'ஊர்க்குருவி' படத்தில் நடிக்கிறார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டருடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vignesh sivan wishes to oorkuruvi kavin 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->