ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்த விக்னேஷ் சிவன்.. வெளியாகும் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ரவுடிபேபி படத்தினைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் - நயன்தாரா கூட்டணி தயாரித்திருந்த திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். இப்படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடித்திருந்ததால் காத்துவாக்குல இரண்டு காதல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியான நிலையில், முக்கோண காதல் நாடகம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளியதால் பிளாக்பஸ்டர் வெற்றியாக அறிவிக்கப்பட்டது.இதற்கிடையில் திருவெறும்பூர், திருச்சி போன்ற பகுதிகளில் உள்ள ஒரு திரையரங்கில் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் குளறுபடி இருப்பதாக கூறி 7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் காதல் சின்னமாக உருவாகிய ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரின் ஸ்டூடியோவுடன் இணைந்து இந்த திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் காத்துவாக்குல 2 காதல் படம் ரூ.100 கோடியை வசூலித்ததாக செய்திகள் வைரலான நிலையில், தற்போது படத்தின் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் உலகம் முழுவதும் ரூ.66 கோடியை வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து, படத்தின் வெற்றிக்கு நன்றி என்று ரசிகர்களுக்கு விக்னேஷ் சிவன் தனது நன்றியை தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vignesh sivan thanks to fans 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->