திருமணம் முடிந்த மறுநாளே வந்த சோதனை.. மன்னிப்பு கடிதம் எழுதிய விக்னேஷ் சிவன்.! - Seithipunal
Seithipunal


காலணியுடன் நாங்கள் நடமாடியதை கவனிக்க தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன் என இயக்குனர் விக்னேஷ் சிவன் கடிதம் எழுதியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் அவரது மனைவி நயன்தாராவும் நேற்று மதியம் சாமி தரிசனம் செய்தனர். அப்போது திருப்பதியில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் இருவரும் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் கோவிலுக்கு வெளியே ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் அங்கிருந்து சென்று விட்டார் இருவரும் சிறிது நேரத்தில் அதே பகுதிக்கு வந்து போட்டோ ஷூட் நடத்தினர். அப்போது இருவரும் காலணிகள் அணிந்து கொண்டுள்ளனர்.

இதனையடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. திருப்பதி திருமலையில் போட்டோ ஷூட் நடத்துவதோ, நான்குமாட வீதியில் காலணிகள் அணிவது கூடாது என்பது ஏற்கனவே விதிக்கப்பட்ட விதியாகும்.

இந்தநிலையில் திருப்பதியில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரி தேவஸ்தானத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் கடிதம் எழுதியுள்ளார். அதில், "காலணியுடன் நாங்கள் நடனம் ஆடியதை கவனிக்கத் தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன். போட்டோ சூட் எடுத்தபோது காலணி அணிந்திருந்ததை உணரவில்லை" என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vignesh Shivan apologize to Thirupati issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->