உயிரிழந்த சுரேஷ் குடும்பத்திற்கு படக்குழு செய்யவுள்ள உதவி.! வெளியான தகவல்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் விடுதலை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ் திரைப்பட ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படத்தின் இறுதி கட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வந்தது. 

இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வெளியிடுகிறார். இந்த நிலையில் விடுதலை திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் படப்பிடிப்பு நேற்று நடைபெற்று வந்தது. 

அப்போது எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியின் போது, ரோப் கயிறு அருந்து கீழே விழுந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்த தகவல்கள் வெளியாகி திரையுலகத்தில் சோகத்தை உண்டாக்கியுள்ளது. 

இந்த நிலையில் தற்போது உயிரிழந்த சுரேஷ் குடும்பத்திற்கு நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து பண உதவி மற்றும் வீட்டு வசதி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சார்பில் நஷ்ட ஈடு வழங்கவுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viduthalai Movie Team may Help To Suresh Family


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->