'உண்மை ஜெயிக்க லேட்டாகும்.. ஆனா கண்டிப்பா ஜெயிக்கும்'.. கஸ்டடி படத்தின் டிரைலர் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கட்பிரபு. இவரது இயக்கத்தில் கடைசியாக சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் அசோக்செல்வனை வைத்து மன்மதலீலை என்ற திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு  தமிழ் மற்றும் தெலுங்கில் கஸ்டடி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் முதல் முறையாக வெங்கட்பிரபு தெலுங்கு படத்தை இயக்குகிறார்.



இந்த திரைப் படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கிறார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இதனை ஸ்ரீநிவாஸா சில்வர் ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், அரவிந்த் சாமி, பிரேம்ஜி, பிரியாமணி, சம்பத் ராஜ் மற்றும் பிரேமி விஷ்வநாத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது கஸ்டடி படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Venkat Prabhu in custody movie trailer release


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->