சமூக வலைதளத்தில் சாதனை படைக்கும் வாரிசு படத்தின் பாடல்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். 

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று திரையில் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. 

இதற்கிடையே இந்த படத்தின் 'ரஞ்சிதமே', 'தீ தளபதி' மற்றும் சோல் ஆஃப் வாரிசு உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று பெரிய அளவில் வைரலானது.

இப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான சோல் ஆஃப் வாரிசு பாடல் புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

அந்த வகையில், பில்போர்ட்டின் ஹாட் டிரெண்டிங் சாங்க்ஸ் வழங்கும் டுவிட்டர் சார்ட்டில் சோல் ஆஃப் வாரிசு பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

varisu movie song trend in social medias


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->