டபுள் டமாக்கா.. வாரிசு படத்தின் இரண்டு புதிய அப்டேட்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'வாரிசு'. இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். 

இதுமட்டுமல்லாமல், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியிடபடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இந்த படத்தின் 'ரஞ்சிதமே' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிக பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

அதன் படி, இன்று மாலை படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகவுள்ள நிலையில், தற்போது புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

varisu movie new poster and second song released


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->