முழு வீச்சில் தயாரான வலிமை படக்குழு.! களத்தில் இறங்கிய ஹெச்.வினோத்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் குமார் நடிப்பில், வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. நேர்கொண்டபார்வை கூட்டணியே இந்த படத்திலும் தொடர்கிறது. 

போனிகபூர் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவில்லை. 

Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal

இந்த படத்தில் அஜித்துடன் ஹூமா குரோஷி மற்றும் கார்த்திகேயா ஆகியோர் நடித்து வருகின்றனர். பொங்கலுக்கு இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்துள்ளது. இருப்பினும் அதற்கு வாய்ப்பில்லை என்று படக்குழுவினர் கூறுகின்றனர். 

​பஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே தயாரிக்கப் பட்டு விட்டாலும், தற்போது வெளியிட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. கொரோனா எல்லாம் குறைந்து படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் போஸ்டரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

வெறிபிடித்து அலையும் தல ரசிகர்கள்.! முதல்வரிடம் செய்த சேட்டை., அப்செட்டில்  அஜித்.! - Seithipunal

இத்தைய சூழலில், வலிமை படத்தின் முக்கிய காட்சிகளை ஐரோப்பிய நாடுகளில் முன்னதாக எடுக்க முடிவு செய்திருந்த நிலையில், இயக்குனர் ஹெச் வினோத் தற்போது புனேவில் அக்காட்சிகளை படமாக்கி வருகிறாராம்.

இதனை தொடர்ந்து, அடுத்த கட்டமாக படத்தில் இடம்பெறுகின்ற ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க வலிமை படக்குழு தென் ஆப்பிரிக்காவுக்கு செல்ல இருக்கின்றதாம் அங்கு படத்தின் பெரும்பாலானக் காட்சிகளை படமாக்கி படத்தை முடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

valimai movie shooting will be in south africa 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->