சினிமாவுக்கு முழுக்கு போட்டு புதிய ரூட் எடுத்த வைகை புயல்..!  - Seithipunal
Seithipunal


தற்போது இருக்கும் காமெடி நடிகர்கள் யோகிபாபு, சூரி, சதிஷ் இவர்களின் காமெடிக்கு கஷ்டப்பட்டு சிரிக்கும் நாம், ஒரு காலத்தில் டிவியில் கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்திருப்போம். மேலும், செல்போன் வைத்திருக்கும் நாம் சிரிக்கிறோம் என்றால் வடிவேலுவின் மீம்ஸ் தான் காரணம். 

இவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்கள் பெரிய அளவிற்கு ரீச் ஆகவில்லை.

புலிகேசி 2 பஞ்சாயத்தால் வடிவேலு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இந்த பஞ்சாயத்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு போகவே வடிவேலுவிற்கு சினிமாவில் ரெட் கார்ட் போட்டுவிட்டனர்.

தற்போது ஒரு தகவல் வந்திருக்கிறது, அது என்னவென்றல் இதுவரை வெள்ளித்திரையில் ரசிகர்கள் பார்த்து ரசித்த வடிவேலுவை இனிமேல் கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் ஆகியவற்றில் ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம்.

பயங்கர காமெடி வெப் சீரியஸில் அவர் நடிக்க போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இதற்காக, சினிமாவில் அவர் என்ன சம்பளம் வாங்குவாரோ அதை விட 2 மடங்கு சம்பளம் அவருக்கு வழங்கப்பட உள்ளதாம். இது தொடர்பான அறிவிப்பு வருகிற ஜனவரி மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vadivelu new acting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->